தேவன் இல்லாத வாழ்க்கை, ஒரு வரைபடம் இல்லாப் பயணம் போன்றது.
வாழ்க்கையே சிக்கலானதும், குழப்பமானதும், பேரழிவைத் தரக்கூடியதுமாயிருக்கிறது. தேவனுடைய வார்த்தை இல்லாத வாழ்க்கை இன்னும் பேரழிவு தான். மனிதகுலத்தை தேவன் படைத்திருப்பது, நாம் நினைக்கும் மற்றும் செய்திடும் எல்லாவற்றிற்கும் அவரையே சார்ந்து இருக்கவேண்டும் என்பதற்காகவே. உருவகமாக மற்றும் சுருக்கமாகக் கூறுவதில் இயேசு மேதை என்பதால், அவரது குறுகிய ஆனால் பூமியை அசைத்திடும் வாழ்க்கையில் இதைத் திறம்பட வெளிப்படுத்தினார். அவரே திராட்சச்செடியும், நாம் கொடிகளுமாயிருக்கிறோம் என்றும், அவர் இல்லாமல் நாம் எதுவும் செய்ய முடியாது என்றும் அவர் நமக்குக் கூறினார். இது எவ்வளவு உண்மையானது, எவ்வளவு ஆழமானது, எவ்வளவு நுண்ணறிவு கொண்டது, ஆனால் மனிதகுலத்திற்கு மிகவும் சிக்கலானது.
“எனக்குள் ஓர் மாற்றம;” என்ற இந்தப் புத்தகம், ஒரு நல்ல, பரிசுத்தமான, புத்திசாலித்தனமான மற்றும் ஞானமான கிறிஸ்தவ வாழ்க்கையை வாழ்ந்திட நம்முடைய தோல்விகளையும் கடந்தகாலத்தையும் மீறி தேவனுடனான தொடர்ச்சியான உறவின் முக்கியத்துவம், அதன் அவசியம் மற்றும் அதற்கான அவசரத்தை முன்னிலைப்படுத்துகிறது. பிசாசின் அழிவுக்கேதுவான தாக்கத்திலிருந்து தேவனுடைய பிள்ளைகளைப் பாதுகாக்கவும், வழிநடத்தவும், அறிவூட்டவும், தேவன் நம்மோடு எவ்வாறு பங்காளராக இருக்கிறார் என்பதையும் விவரிக்கிறது. இந்தப் புத்தகம் பாவத்தால் வெறிபிடித்த இவ்வுலகில் ஒரு சிறந்த வாழ்க்கை மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்திற்கான மனநிறைவு மற்றும் உறுதியின் குரலாகும்.
Reviews
There are no reviews yet.